தங்க பத்திர விற்பனை.. செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.
harasi S இந்தியாவில் தங்கம் என்றாலே அது ஒரு கவர்ச்சிகரமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது. பேப்பர் தங்கத்தின் மீதான ஆர்வமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதிலும் ஆர்பிஐ வெளியீடு செய்யும் ஒரு முதலீட்டு அம்சம் என்பதால், ஒரு பாதுகாப்பான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. நாட்டில் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் நல்ல லாபம் கொடுத்துக் கொண்டு இருக்கும் முதலீடு என்றால், அதில் தங்கம் முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறது. அதோடு செய்கூலி, சேதாரம் இல்லாத பாதுகாப்பான சற்று குறைந்த விலையில் உள்ள தங்க முதலீடு பற்றித் தான் பார்க்க போகிறோம். தங்கத்தில் முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு சமீப காலமாக தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் நிலையில், நிபுணர்கள் இன்னும் விலை அதிகரிக்கும் என்றே கூறி வருகின்றனர். ஆக நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது இன்னும் அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கணித்து வருகின்றனர். இதன் காரணமாக ஆர்பிஐ-யின் தங்க பத்திர திட்டம் நல்ல முதலீட்டு அம்சமாக பார்க்கப்படுகிறது. பிசிகல் தங்கம் வேண்டாம் முந்தைய காலத்தில் எல்லாம், நம்மவர்கள் தங்கத்தினை நகையாகத் தான் அதிகம் வாங்கி வைப...

Comments
Post a Comment